Monday 17 March, 2008

வெங்காயம்

ன்றாகப் பழகியதொரு பாதை
எனைக் கடந்துகொண்டிருக்கும் பொழுது
திருப்புமுனை ஒன்றில் உனைச் சந்தித்தேன்
அதுவரை
கனவுகளால் செப்பமிடப்பட்ட அந்தப் பாதை முழுக்கவும்
நானே நிரம்பியிருப்பதாய் உணர்ந்திருந்தேன்
இலவு காத்த கிளி போல அல்லாமல்
பறந்து போன பஞ்சாகியது
சூழல் புதிதானது
நீயும் புதிதானாய்
பிறிதொரு நாள்
உன்னுள் நானும் என்னுள் நீயுமாய்
உறைந்து கிடக்கிற பொழுது
நன்றியுள்ள ஜீவனுக்குச் சிறுவயதில்
நான் வீசிய கல் போல
எனக்கே திரும்பியது
உன் மறுமுனையில் நான் என்றானபிறகு
நமக்கிடையில் யாரோ
நடந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள்
இந்த முறை
இலவு காத்த கிளியோ
விலை கூறப் போகிற வெங்காயமோ?

Friday 28 December, 2007

மெலடீஸ் பிரம் மெரீனா


விரிந்த மணற் துகள் பரப்பில்
தன்னை அறியும் சுயமற்றிருந்த அவனுக்குத் தன்னை
யாரென்று தெரியவில்லை
இடது கையில் காகிதத்தில் வெண்புறாவை
ஏந்தியிருந்தான்।
வசதிக்காக வலது கையில் கரும்புறா ஒன்று
இரண்டும் இணைகிற போது

வணக்கம்!
மற்றுமொரு சுவையான நிகழ்ச்சியில்
உங்களைச் சந்தித்ததில்
ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிநறது
கூட்டுக் குடும்பத்தின் இன்றைய நிலைகுறித்து
இந்நிகழ்ச்சியில் பேச இருக்கிறோம்
இந்நிகழ்ச்சியிலும் நீ

Wednesday 12 September, 2007

தோழியர் தினம்

உன் அருகாமையை
உணர்ந்தேன் முதன்முறையாய்
விழியோரமாய் துளிர்த்த கண்ணீர்
கிளைத்துப் பெருத்தபடியே....
நினைவுகளை நித்தியப்படுத்தி
தனிமையைப் போக்கிட முயன்றேன்
பல விதங்களில்
அடுக்கடுக்காய் நாம் ஒன்றிணைந்து
எடுத்த புகைப்படங்களை உற்றுப் பார்த்தபடி....
நீ எடுத்துத் தந்த புத்தாடையை
உன் திருமணத்திற்குப் பிறகு மீண்டும்
எடுத்து உடுத்தியபடி....
நாம் ஒன்றாய் நித்தமும்
நடந்த நடைபாதையில் நடந்தபடி....
அதிகாலையில் ஓய்விற்காய் நாம்
அமர்ந்து திரும்பிய காந்தி சிலையைப்
பேருந்தின் ஜன்னலோரமாய் அமர்ந்து ரசித்தபடி....
நாம் முதன்முதலாய் ஒன்றாய்ப் பார்த்த
“மொழி” படத்தை ஏழாவது முறையாய்
அலுக்காமல் அமர்ந்து பார்த்தபடி....
என் ஆய்விற்காய் நீ சொன்ன உத்திகளைப்
பயன்படுத்தி ஒவ்வொரு நூலையும் வாசித்தபடி....
உனக்கான என் செய்கைகள் தொடர்ந்து
படிப்படியாய் உயர்ந்து
விழிமூடும் தருணங்களிலும் விலகாமல்
கனவின் உச்சமாய் மீண்டும் நீ.

நன்றி: கோ. கீதா

நோக்கம்

அவன் வரவில்
என் கொங்கைகள் மிளிர்ந்தன
என் அடிப்பரிமாணத்தில் கண்ணீர் மல்கின
ஏனோ தெரியவில்லை
காற்றின் அழுத்தம்
என்னை நோக்கி அல்ல
அந்த விளக்கை நோக்கி.

நன்றி: கு. அரிக்குமார்

எடை குறை

எடை குறைவாய்.....
குழந்தை பிறந்தது
ரேஷன் கடைக்காரருக்கு!

Monday 10 September, 2007

யாரும் அறியாத ரகசியம்..