Wednesday 12 September, 2007

தோழியர் தினம்

உன் அருகாமையை
உணர்ந்தேன் முதன்முறையாய்
விழியோரமாய் துளிர்த்த கண்ணீர்
கிளைத்துப் பெருத்தபடியே....
நினைவுகளை நித்தியப்படுத்தி
தனிமையைப் போக்கிட முயன்றேன்
பல விதங்களில்
அடுக்கடுக்காய் நாம் ஒன்றிணைந்து
எடுத்த புகைப்படங்களை உற்றுப் பார்த்தபடி....
நீ எடுத்துத் தந்த புத்தாடையை
உன் திருமணத்திற்குப் பிறகு மீண்டும்
எடுத்து உடுத்தியபடி....
நாம் ஒன்றாய் நித்தமும்
நடந்த நடைபாதையில் நடந்தபடி....
அதிகாலையில் ஓய்விற்காய் நாம்
அமர்ந்து திரும்பிய காந்தி சிலையைப்
பேருந்தின் ஜன்னலோரமாய் அமர்ந்து ரசித்தபடி....
நாம் முதன்முதலாய் ஒன்றாய்ப் பார்த்த
“மொழி” படத்தை ஏழாவது முறையாய்
அலுக்காமல் அமர்ந்து பார்த்தபடி....
என் ஆய்விற்காய் நீ சொன்ன உத்திகளைப்
பயன்படுத்தி ஒவ்வொரு நூலையும் வாசித்தபடி....
உனக்கான என் செய்கைகள் தொடர்ந்து
படிப்படியாய் உயர்ந்து
விழிமூடும் தருணங்களிலும் விலகாமல்
கனவின் உச்சமாய் மீண்டும் நீ.

நன்றி: கோ. கீதா

நோக்கம்

அவன் வரவில்
என் கொங்கைகள் மிளிர்ந்தன
என் அடிப்பரிமாணத்தில் கண்ணீர் மல்கின
ஏனோ தெரியவில்லை
காற்றின் அழுத்தம்
என்னை நோக்கி அல்ல
அந்த விளக்கை நோக்கி.

நன்றி: கு. அரிக்குமார்

எடை குறை

எடை குறைவாய்.....
குழந்தை பிறந்தது
ரேஷன் கடைக்காரருக்கு!

Monday 10 September, 2007

யாரும் அறியாத ரகசியம்..